தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், தென்காசி - திருநெல்வேலி மெயின் ரோட்டில், ஆலங்குளம் எனும் ஊருக்கு கீழ்புறம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வன்னிய செண்பக சாஸ்தா திருக்கோயில், அய்யனார் பிறப்பு வரலாறு.
கைலாசத்தில், பகவான், பார்வதி, தேவர்கள், அனைவரும் ஆண்டு வந்த பொழுது, பூலோகத்தில் அரக்கர் வம்சத்தில் வல்லரக்கன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் பகவானைத் நினைத்து பன்னிரண்டு ஆண்டு காலம் கடுந்தவம் புரிந்து, பின் பகவானின் அருட்கடாச்சம் பெற்று அவன் நினைத்த வரத்தை பெற்றான்.
அதை கைலாசத்தில் பரிசோதிக்க, கைலாசம் தீப்பிடித்து எரிந்தது. இதைக்கண்டு பயந்த பகவான் கானகத்திற்கு சென்று செவ்வரழிப்பூவின் மொட்டில் சிவலிங்கமாக மாறி மறைந்தார். அவரைக் காப்பாற்ற எம்பெருமான் கண்ணன், ஆடு மாடு மெய்ப்பவனாக வந்து அரழி மொட்டில் மறைந்திருந்த பகவானை கண்டு, ஆடு மாடுகளை அவரிடம் ஒப்படைத்துவிட்டு அரக்கனை கொல்வதற்க்கு மோகினி அவதாரமெடுத்து அவன் முன் தோன்றினார்.
மோகினியை மாலையிட நீராடிவிட்டு வந்த வல்லரக்கன், அவன் பெருவிரலை எடுத்து கண்டத்தில் வைத்தபோது அவனுடைய தலை வெடித்து கடலில் போய் விழுந்தது. இதை பகவானிடம் பெருமாள் சொல்ல, அதே வடிவம் எடுக்க பெருமாளை பகவான் வேண்ட பெருமாள் பெண்ணாகவும், பகவான் ஆணாகவும் நிற்க, இருவரும் தழுவி நிற்க, ஐந்து சாஸ்தா, அய்யனார் பிறந்தார்கள். ஆலங்குளத்தில் செண்பக குளத்துக் கரையில், வன்னிய மரத்தடியில் பிறந்ததால், அவருக்கு ஸ்ரீ வன்னிய செண்பக சாஸ்தா என்று பெயர்.